திருத்தப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (10.07.2023) யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
புதிய சட்டங்கள் தொடர்பில் சாதக பாதக தன்மைகள் தொடர்பில் முற்கூட்டியே அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும்.
இந்நிலையில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இலங்கையில் உள்ள 15 கடற்தொழில் மாவட்டங்களிலும் புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் போது புதிய சட்டத்தில் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் வருகைதரும் அதிகாரிகளுடன் தெளிவாகக் கலந்துரையாடலாம்.
இல்லாவிட்டால் அமைச்சில் கலந்துரையாட விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.