நாட்டில் முட்டை விலை குறையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
.
முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதிநிதிகள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
அதேவேளை தற்போது நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி 85 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும், மொத்த விலையில் 35 மற்றும் 36 ரூபாவிற்கு ஒரு முட்டை பண்ணையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.