நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களையும் மற்றும் நண்பர்களையும் மகிழ்விப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தேர்தல் சட்டத்தின் கீழ் அது தொடர்பான வசதிகளை வழங்கும் இடங்கள் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கண்டி மற்றும் பிற பகுதிகளில் இருந்து வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்காக நடத்தும் விருந்துபசாரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையத்திற்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த முறைப்பாடுகளின் பிரகாரம் குறிப்பிட்ட சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டு குறித்த நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.