நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மற்ற வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
மார்ச் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், முதன்முறையாக, ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய எரிபொருளின் விலை, செப்டம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைககு வரும் வகையில், 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டது.
அதன்படி தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 311 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.