கடவுச்சீட்டு பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஏதோ கலர் கலராய் மெகசின் போல பாஸ்போர்ட்டுகளை காட்டினாலும் இன்னும் அனேகர் பாஸ்போர்ட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கங்கள் செய்தவற்றை மாற்றிக் காட்டுகிறோம் என்று வந்த இந்த அரசு இன்னமும் அதைவிட சிக்கலில் சிக்கிக் கொண்டு நிற்கிறது.
வெளியில் நின்று கோல் போடு என கோஷம் போட்டது போலத்தான், இன்றைய அரசியல் நிலை இருக்கிறது. பாஸ்போர்ட் கியூ இல்லை என்று சொன்னாலும், கியூவை விட , போவோருக்கு பாஸ்போர்ட் எடுக்க கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம். உங்களுக்கு எதுக்கு அவசரமாக பாஸ்போர்ட் என கேட்பதுதான் பெரிய பகுதி.
தேவை என்றால் மட்டும் பாஸ்போர்ட் எடுங்கள் என்று அட்வைஸ் கொடுக்கிறார்கள். அதாவது தேவை என்றால் மட்டும் பாஸ்போர்ட் எடுக்க சொல்கிறார்களாம். காரணம் போதிய அளவு பாஸ்போர்ட் காரியாபாலத்தில் இல்லை. பாஸ்போர்ட் இருந்தால் தான் பயணம் செய்யும் போது காட்டலாம் என்பது இல்லை.
வெளிநாட்டில் ஒரு வேலைக்குப் போகும் முன் அப்ளை செய்வதற்கு கூட பாஸ்போர்ட் விபரங்கள் கொடுக்க வேண்டும். அது கூட புரியாதவர்களாக, போகும்போது வந்து பாஸ்போர்ட் எடுங்கள் என்று சொல்கிறார்களாம். என்னடா சோதனை?