கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யபரலுவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
பியகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா, மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 67 கிராம் 240 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 20 ஆயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.