கனேடிய மாகாணமொன்று, இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணம், பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல் திட்டங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அத்தியாவசிய ஆவணமான கியூபெக் தேர்வு சான்றிதழ் (Quebec Selection Certificates – CSQs) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளது.
அதனால், வழக்கமான திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Regular Skilled Worker Program) மற்றும் கியூபெக் அனுபவ திட்டத்துக்கான பட்டதாரி வழிமுறை (graduate stream of the Quebec Experience Program – PEQ) ஆகியவற்றுக்கு புலம்பெயர்ந்தோர் விண்ணப்பிப்பது பாதிக்கப்படும்.
அதேசமயம் இந்த இடைநிறுத்தம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் கியூபெக் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.