Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த பத்து வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் கார் இருக்கும்; தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே

அடுத்த பத்து வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் கார் இருக்கும்; தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே

2 years ago
in செய்திகள்

அடுத்த பத்து வருடங்களில் குடும்பமொன்று கார் ஒன்றுக்கான உரித்தினை கொண்டிருக்கும் வகையில் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி 14ஆம் திகதி நடைபெறும். 16அல்லது 17ஆம் ஆகும்போது அமைச்சரவை பதவிப்பிரமாணங்களைச் செய்துகொள்ளும். 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கூட்டப்படும்.

அதன்பின்னர் சிறந்தவொரு நாட்டை உருவாக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மக்களுக்கான சிறந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக கட்டடங்களை நிர்மாணிப்பது அபிவிருத்தி என்றாகிவிடாது. வீதிகளில் குடும்பமாகச் செல்கின்றவர்களைப் பார்கின்றபோது எமக்கு மிகுந்த கவலையாக உள்ளது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் அனைவரும் மோட்டார் வண்டியில் மழையில் நனைந்தவாறு செல்கிறார்கள்.

வெயிலுக்குள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு முடியாது இருக்கின்றது.

அவர்களின் வாழ்நாள் பூராகவும் பணத்தைச் சேர்த்தால் கூட அவர்களால் கார் ஒன்றைகொள்வனவு செய்ய முடியாத நிலைமையே உள்ளது. ஆகக்கூடுதலாக அவர்களால் டக்டர் ஒன்றுக்கான சில்லையே கொள்வனவும் செய்யும் இயலுமை ஏற்படுகின்றது.

இதற்கு காரணம், கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தி ஊழல், மோசடிகள் நிறைந்த ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தமது மோசடிகளை மறைப்பதற்காக இறக்குமதி வரிவீதத்தினை அதிகரித்துள்ளார்கள்.

கார்களின் விலைகள் பெரிதாக இல்லை. ஜப்பானில் உள்ள விக்ஸ் ரக காரை 12இலட்சத்துக்கு கொள்வனவு செய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த முடியும். ஆனால் மோசமான ஆட்சியாளர்களால் அதனைச் செய்யமுடியாதுள்ளது. அவர்கள் இறக்குமதிக்கான வரியை 75 சதவீதத்துக்கு அதிகமாக விதிக்கும் நிலைமையே உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் வாகனம் 395இலட்சமாக இருப்பதோடு அவருடைய வாகனத்தில் டயர் ஒன்றின் பெறுமதியே ஐந்து இலட்சங்களாக உள்ளது. ஆகவே சதாரண மக்களும் வாகன உரிமையாளர்களாக மாற்றும் நிலைமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் உருவாக்குவோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
Next Post
தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறும் விடயம்; திருத்தம் மேற்கொள்ளுமாறும் சிறிதரன் சுட்டிக்காட்டு

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறும் விடயம்; திருத்தம் மேற்கொள்ளுமாறும் சிறிதரன் சுட்டிக்காட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு