முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடு பாணந்துறை வலன பகுதியின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாசகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் நோக்கிலேயே இந்த சோதனை நடவடிக்கை அமைந்திருந்தது.
நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியது.
ஆனால் அப்போது முன்னாள் எம்பி வீட்டில் இல்லை, தொழிலாளி மட்டும் இருந்துள்ளார். குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சுஜீவ சேனசிங்க குருந்துவத்தை காவல்துறையில் முறைப்பாடு செய்ததுடன், தான் வீட்டில் இல்லாத போது காவல்துறை குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்தார். அவர்கள் உண்மையாகவே காவல்துறை அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.