சமூக வலைத்தளங்கள் சிறுவர்களை சீரழிப்பதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்டோர், முகநூல்,இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பில் சட்டம் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ்(Anthony Albanese) தெரிவித்துள்ளார்.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின், மிக மோசமான பதிவுகளை, சிறுவர்கள் பார்க்காமல் தடை செய்யும் முயற்சியில் தோல்வியடைந்துவிட்டதாகவும் எனவே, முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்றவற்றை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இது தாய், தந்தைக்குமானதுதான், உண்மையிலேயே சமூக ஊடகங்கள், பிள்ளைகளை சீரழித்து வருகின்றன. தற்போது அதனைத் தடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.
மேலும், நான் எனது கணினியில் வேலை செய்யும்போது, எனக்குத் தேவையில்லாத விஷயங்கள் திரையில் வருகிறது. இதுவே 14 வயது குழந்தைக்கு நேர்ந்தால் என்னவாகும் என்கிறார்.
இந்த சட்டம் நவம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.