பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றினார். குணச்சித்திர வேடம், வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குணச்சித்திர வேடங்களில் மட்டும் இன்றி நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனி முத்திரை பதித்தவர் டெல்லி கணேஷ். அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ், கமல்ஹாசனும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் உடலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.