எதிர்வரும் 2023/24 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மேலும் ஓர் இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அவரிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, மூன்று பயிர் செய்கைக்கு பிறகு விவசாயி களுக்கு இலவச ரி. எஸ். பி. (ட்ரிபிள் சுப்பர் பொஸ்பேட்) வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த பெரும் போகத்தில் நெல் பயிரிட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு போகத்தில் நெல் செய்கை செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர்களுக்கு இலவசமாகரி. எஸ். பி. வழங்கப்படும்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அரசு இந்தச் சலுகைகளை வழங்குகிறது. கடந்த பெரும் போகத்தில் உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை அரசாங்கம்விவசாயிகளுக்கு வழங் கியதுடன், இம்முறை உரங் களை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை மானியமாக வழங்கியுள்ளது.அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வ தற்கு வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங் கம் தீர்மானித்துள்ளது. அதன் படி, விவசாயிகள் விரும்பினால் தனியார் அல்லது அரசு உர நிறுவனங்களிடம் இருந்து இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்முதல் செய்யஅனுமதிக்கப்படுகிறது.