மட்டக்களப்பு,ஏறாவூர் சம்சம் கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்காக வீடு கட்டி தருவதாக வெளிநாட்டில் பணத்தினை பெற்று அதில்50 குடும்பங்களுக்கான வீடுகள் கட்டி வழங்கிவிட்டு மேலும் 100 குடும்பங்களுக்கான வீடுகள் இன்னமும் கட்டிக்கொடுக்கவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அப்பகுதி மக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
சம்சம் கிராமத்தில் வாழும் குடும்பங்களின் ஏற்பாட்டில் இவ் அமைதியான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தங்களை காட்டி வீடு கட்டி கொடுப்பதாக கூறி அரபு நாட்டில் இருந்து பணத்தை பெற்று சரியான முறையில் வீடுகள் கட்டி தரவில்லை எனவும் மழை காலங்களில் வெள்ள அபாயங்களையும் எதிர்நோக்கி வருவதனையும் முன்னிறுத்தியும் ஒரு வீட்டினுள் 3,4 குடும்பங்கள் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதனை வலியுறுத்தியும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இங்கு இருக்கின்றவர்களுக்கு செம்மையான ஒரு வீடு இல்லை அத்தோடு வீதிகள் ஒழுங்கு இல்லை காலகாலமாக இந்த வேலைகள் வாக்கு போடுறது அரசியல்வாதிகளுக்கு பின்னால் திரிவது இவை காலம் காலமாக இடம் பெற்று வருகின்றது.
ஐயங்கேனி, தளவாய், கொம்மாதுறை ஆகிய பகுதிகளில் 1500 ஏக்கர் காணியில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லா 150 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறி அரபுக்காரர்களிடம் சென்று பேசி பணத்தினை பெற்றுக் கொண்டு வந்துள்ளார் அந்த ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது இந்த பணத்தில் 50 வீடுகள் மாத்திரம் தான் கட்டப்பட்டிருப்பதாகவும் நூறு வீடுகள் இன்னும் கட்டிக் கொடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த அரசில் எவரும் ஊழல் செய்ய முடியாது எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் இவை அனைத்தும் அரசியல் மற்றும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தனிப்பட்ட விடயங்கள்.
இவ்வாறு 150 வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை தற்பொழுது ஒரு சிலர் கள்ள உறுதிகளை முடித்துக் கொண்டு தங்கள் வசம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
வீடு கட்டுவதற்காக கடிதங்கள் எழுதி தர கூறுவார்கள் மாறி மாறி கடிதங்கள் எழுதிக் கொடுத்தது மாத்திரம் தான் மிகுதி ஆனால் இதுவரை எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை சமூர்த்தி முத்திரை கூட எங்களுக்கு இல்லை.
எங்களுக்கு தருவதாக கூறப்பட்ட வீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை நாங்கள் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றோம் எங்களுக்காக வந்த வீடு எங்களுக்கு தர வேண்டும் அரபுக்காரர்களிடமிருந்து எமக்கு குழு வழங்குவதாக கூறி பெற்ற பணத்திற்கான வீடு இன்னமும் எங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.