Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து எச்சரிக்கை வந்ததாகவும் இதனால் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் சோதனை நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

UL 122 என்ற விமானம் இன்று காலை 11.59 மணியளவில் கொழும்பில் தரையிறங்கியது. விமானத்தில் இருப்பதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவர் குறித்து சென்னை கட்டுப்பாட்டு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆய்வுக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்பட்டதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. எனினும் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த அடுத்த விமானமான UL 308, பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தாமதமாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு