திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரி கடவையில் (Zebra Crossing) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த பொதுமக்களும் வழிப்போக்கர்களும் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யார் என்பதும், அவரது மரணத்திற்கான காரணம் விபத்தா அல்லது வேறு காரணமா என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








