பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களின் மேம்பாட்டை ஆராயும் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.
துறைசார் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக இதன்போது தெரியவந்தது.
குறித்த குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.








