தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் நன்மைக்காகவும் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும் என தேசிய மக்கள் சகதியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுய்ப்பட்ட கந்தசாமி பிரபு தெரிவித்தார்
நடந்து முடிந்த நாடாளுமன்ற 10 வது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட கட்சி 55498 வாக்குகளை பெற்று அதில் 14856 விருப்பு வாக்குகளை பெற்ற கட்சியின் மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படடுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெருவத்தாட்சி அலுவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் நேற்று வெள்ளிக்கிழமை (15) அறிவித்தார்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினரை வாக்கேண்ணும் மத்திய நிலையமான இந்து கல்லூரி வளாகத்தில் கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்ட மக்கள் தெரிவு செய்துள்ளனர். என்னோடு இந்த தேர்தலில் வேட்பாளராக பயணித்த அனைத்து வேட்பாளருக்கும் நன்றிகள்.
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கீழ் ஒன்று சேருகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் பணக்காரர்கள் இன்னும் பணக்காரராகாமல் ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பது எமது அடிப்படை கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையில் மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும்.
அதேவேளை தேசிய மக்கள் சகத்தி மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி அனுரா குமார தஜசாநாயக்கா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து எமது உறவுகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் தோழனாக தொடர்ந்து பயணிப்பேன் என்றார்.