Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய அரச மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

இந்திய அரச மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய, உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் நேற்று (15) இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாம் உலகம் பூராகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன
செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன

October 1, 2026
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
Next Post
அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத் சாதனை

அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத் சாதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு