தமிழ் மக்கள் மாவீரர் தினத்தனற்று அமைதியான சூழலில் தமது நினைவேந்தலை செய்யலாம் என்று ஜனாதிபதி அனுரவின் கையெப்பதுடன் உள்ள ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்படுவதாவது,
தமிழ் மக்களுக்கு வணக்கம், நீண்ட நெடிய காலமாக தமது சுதந்திரத்திற்காகப் போராடி, பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, வாழ்ந்து வரும் தமிழ் மக்களே.. போரின் போது உயிர் நீத்த உங்களின் பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை இம்மாதத்தில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் வணங்கி வந்திருக்கிறீர்கள்.
இவ்வாண்டு முதல் இந்த நவம்பர் மாதத்தில் உங்களுக்காக உயிர்க்கொடைத் தியாகம் செய்தவர்களை நீங்கள் எந்த விதமான தடைகளும் இன்றி, நிம்மதியாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் நினைவுகூர முடியும் என்பதுடன், இறந்தவர்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஆலயங்கள், பாடசாலைகள், அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டகளின்றி மிகவும் அமைதியான முறையில் யாருடைய தொந்தரவுகளும் இன்றி, நினைவேந்தல் செய்வதற்கான ஒரு அமைதியான சூழலை இன்று அடைந்துள்ளோம். அப்படி ஒரு அமைதியான சூழலை இயற்கை தான் உருவாக்கித் தந்துள்ளது என்று நினைக்கின்றேன்; என்றுஅதில் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் இந்த அறிவித்தலின் உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை என்பதுடன், அனுரவின் தமிழ் இணைப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது எனவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.