புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேசியப்பட்டியல் நியமனம் வழமைக்கு முரணானது என தெரிவித்திருந்தார்.
இது கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினர் நேற்று ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் ஏதேனும் எதிர்ப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.