Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து, மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 அல்லது 0113 668 100 அல்லது 0113 668 013 அல்லது 0113 668 010 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது
செய்திகள்

இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது

May 23, 2025
பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்
உலக செய்திகள்

பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்

May 23, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

May 23, 2025
யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்
செய்திகள்

யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்

May 23, 2025
ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!
காணொளிகள்

ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!

May 23, 2025
இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்
செய்திகள்

இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்

May 23, 2025
Next Post
அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு