Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது; மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது; மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைகள் உட்பட மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஆகிய கடற்பரப்புக்குள், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றை தினம் (சற்றுமுன்) (23) இலங்கையின் வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கப்படுவதாவது,

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பு மேலும் தீவிரமடையும் பட்சத்தில் இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் அதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளின் கடல் பரப்புகள் மிகவும் ஆபத்தாக காணப்படும்.

காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு (60-70) கி.மீ வரை அதிகரிக்கலாம். மிக அதிக மழை அல்லது
இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் (22) உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். நாளை 24 ஆம் திகதி அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் 25 ஆம் திகதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். இது 26 ஆம் திகதி அன்று புயலாக ( மிதமான வலுக்கொண்ட புயலாக) மாற்றமடையும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (இன்று காலை) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இது கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பின்னரே கணிக்கலாம். தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி – கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் எதிர்வரும் 25ம் திகதி இரவு அல்லது 26ம் திகதி கிழக்கு கடற்பகுதி க்கு(அம்பாறைக்கு அண்மித்து) பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தீவிரமடையும். குறிப்பாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரையான 48 மணி நேரத்தில் 350 மி.மீ. இனை விட உயர்வான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

25 ஆம் திகதி முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். 26,27 மற்றும் 28ம் திகதிகளில் காற்றின் வேகம் கடற்பகுதிகளில் 70 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரை வீசக் கூடும். உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேற் குறிப்பிட்ட கடற் பகுதிகளில் பல நாட் கலங்களில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரை திரும்புவது அவசியம்.

பொதுவாக சாதாரண சந்தர்ப்பங்களில் அதிக கனமழை கிடைத்தாலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் புயல் போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும் கன மழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில்;

  1. கரையோரப் பகுதிகளில் புயல் காற்று காரணமாக உயர்வான அலைகளின் விளைவால் நிலப்பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும்.
  2. புயலின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நிலப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீர் வடிந்து கடலை சென்றடையாது.
  3. வேகமான காற்றோடு கூடிய மழை என்பதனால் மழையின் பாதிப்பு உயர்வாக இருக்கும்.
  4. நிலம் ஏலவே நிரம்பியுள்ளமையால் மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு 10. மி.மீ. உம் நிலத்தின் மேலேயே தேங்கி நிற்கும்.

மேற் குறிப்பிட்ட காரணிகள் காரணமாக எதிர்வு கூறப்பட்டுள்ள புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே!

இந்த புயல் தொடர்பான முன்னறிவிப்பினை சாதரணமாக கருத வேண்டாம்.

இந்த நிமிடம் வரை சகல மாதிரிகளும்(கிட்டத்தட்ட 19 மாதிரிகள்) இந்த புயல் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழை வீழ்ச்சியையும், வேகமான காற்றையும், அதீத கடற் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றே வெளிப்படுத்துகின்றன.

ஆகவே ஒரு புயலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். ஒரு அனர்த்தத்துக்காக எம்மை தயார்ப்படுத்தி அந்த அனர்த்தம் நிகழாது விட்டால், அதனால் எமக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் நாம் தயாராக இல்லாமல் அனர்த்தம் ஒன்று நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மோசமானதாக இருக்கும். ஆகவே எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம்.

வடக்கு ,கிழக்கு தென் மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல் அவசியம்.

எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக உயரம் கொண்ட கடலலைகள் காரணமாக கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உள்வருகை தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மற்றும் காலி மாவட்ட கரையோர மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

கனமழை காரணமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என்ற விடயத்தை அனைத்து மக்களுக்கும் அறிவித்தல் வேண்டும். குறிப்பாக 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக விழிப்போடு இருத்தல் அவசியம்.

மிக வேகமான காற்றினால் பாதிக்கக்கூடிய மரங்கள், கட்டிடங்கள் என்பன போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

WW2024112302E_mergedDownload

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது
செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

May 26, 2025
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!
செய்திகள்

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

May 26, 2025
சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை; பொலிஸ் ஊடகப்பிரிவு
செய்திகள்

சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை; பொலிஸ் ஊடகப்பிரிவு

May 26, 2025
மட்டு பனிச்சங்கேணி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு பனிச்சங்கேணி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

May 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு

May 25, 2025
மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு
செய்திகள்

மட்டு நகரில் சைக்கிள் திருடன் கைது; இரண்டு சைக்கிள்கள் மீட்பு

May 25, 2025
Next Post
புதிய எம்.பிக்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கிகளுக்கு பதிலாக இரண்டு பொலிஸார்?

புதிய எம்.பிக்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கிகளுக்கு பதிலாக இரண்டு பொலிஸார்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.