Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

2 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரில் வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி- 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கின்றது.

பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும்.

பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன.

சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!
செய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!

May 27, 2025
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா
உலக செய்திகள்

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா

May 27, 2025
“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்
செய்திகள்

“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்

May 27, 2025
தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

May 27, 2025
உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
செய்திகள்

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

May 27, 2025
15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

May 27, 2025
Next Post
சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு