தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே சென்று, மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இது வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது இதுவரை சூறாவளியாக மாறவில்லை.
இன்று (27) இது சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை கொண்ட காலநிலை மட்டக்களப்பில் மேலும் வலுவடையும் சாத்தியம் இல்லை.
மழையுடன காலநிலை படிப்படியாக குறைவடைந்து கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை (28) பிற்பகலின் பின்னர் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம் எனவும்
அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.