Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிர்தோஸ் நழீமி ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அரச அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (28) கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர், திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான உணவு விடயங்கள், சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

மாவட்டத்தில் பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது பாதிப்புகள் குறித்த விபரங்கள் பெறப்பட்டதும் அதற்கான நஸ்ட ஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேவேளை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதிகளை அரசாங்கம் ஒதுக்குவதற்கு தயாராக உள்ளது.

ஜனாதிபதியினால் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பணிப்புரைக்கு அமைய விஜயம் மேற்கோண்டு ஆராய்ந்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எவ்வாறாயினும் மக்களை பாதுகாக்கும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தாங்கல் முகாமில் தஞ்சமைந்துள்ள மக்களை சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.