வியட்நாம் நாட்டிலுள்ள தோட்டம் ஒன்றில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ள நிலையில் அதனை காண சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர்.
பெருப்பாலும் நாம் நாட்டில் உள்ள தோட்டங்களில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த வியட்நாம் தோட்டத்தில் பாம்புகள் பழங்கள் போல் வளர்க்கப்படுகின்றன. வியட்நாமின் உள்ள ஒரு பண்ணையில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
இதேவேளை, மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுவது போல் இங்கும் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 400க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்புகளின் விஷத்திலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அவற்றின் விஷத்தைக் குறைக்கும் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
டோங் டாம் பாம்புப் பண்ணை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இந்த தோட்டத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
இந்த தோட்டம் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.