Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீன தூதுவர், தமிழ் மக்களின் தீர்வு மற்றும் காணமாலாக்கபட்டோர் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சீன தூதுவர் வழங்கிய பதில் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையாகவே சீன தூதுவரின் கருத்திற்கு முற்றாக எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் .

தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு வீழ்ந்தது உண்மை .ஏற்கனவே முன்பிருந்த அரச சார்பான கட்சிக்கு வீழ்ந்தவைதான் இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு வீழ்ந்துள்ளது.

மேலும் இந்த அனுரகுமார அரசாங்கத்தினை முற்று முழுதாக ஏற்றுகொண்டு வாக்களித்தது என்றும் கூறமுடியாது.

இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வெறுப்பும் அங்கே வாக்காக விழுந்துள்ளது. அதனை விட வழக்கமாக இங்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து கொண்ட வாக்கை விட அதிகளவு வாக்கினை பெற்றுள்ளார்கள்.

ஆடு அழுகின்றது என ஓநாய் வெம்பி அழுத கதை தான் சீனதூதுவரின் கதை மீது எனக்கு வருகின்றது.

உண்மையாகவே இந்த காணாமலாக்காபட்டவரின் பிரச்சினைக்கு எப்பொழுதோ தீர்வு கிடைத்திருக்கும் .

கடந்த அரசாங்கங்கள் இருக்கின்ற பொழுது அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொடுப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்தும் சீனாக்கு அங்குள்ள வீற்றோ பவர் காரணமாக தான் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுபோகப்படவில்லை.

ஏன் என்றால் வெளிப்படையாகவே சொல்லுகின்றார்கள் காணாமலாக்கபட்டவரின் பிரச்சினையை கொண்டு சென்றால் சீனா இலங்கைக்கு ஆதரவாக வீற்றோ அதிகாரத்தை பாவிக்கும் என்கின்றார்கள்.

அதேபோல இறுதி கட்ட யுத்தத்தின் பொழுதும் சீனா பொஸ்பரஸ் குண்டுகளை கொடுத்து தமிழ் மக்களை கொல்வதற்கு முக்கால்வாசி அவர்கள் தான் பொறுப்பாளிகள்.

யுத்தம் முடிவடைந்தும் காலத்துக்கு காலம் வரும் ஆட்சியாளர்களுடன் முட்டு கொடுத்து தங்கள் நலனை தக்க வைப்பதற்காக தங்கள் சுயலாபத்தினை பெறுவதற்கும் தமிழ் மக்களை வஞ்சித்து கொண்ட இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேசமயம் அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள், இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன என்று கருத்து தெரிவித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்
செய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

October 13, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

October 13, 2026
விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்
செய்திகள்

விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

October 13, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
Next Post
பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு