ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 190 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.நேற்று நடந்த சட்ட மூலத்தின் குழு நிலையின் போது நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆகிய இரண்டு தினங்களிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.