பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காக பௌத்த பிக்கு ஒருவர் நேற்று (03) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் நாமல் ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலக அறை, தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமன்றி, மொட்டுக் கட்சியின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு அடிக்கடி வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையில் பங்கேற்ற குழுவின் முன்னணியில் இருந்த பௌத்த பிக்குவே நேற்று நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், பாராளுமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, குறித்த பௌத்த பிக்கு நேற்று நாள் முழுவதும் நாமல் ராஜபக்ஷ தங்கியிருந்த கட்சி அலுவலக அறையிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.







