மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் MJF/MAF/MBA/JP அவர்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டார்.
23.11.2024 அன்று மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் நடைபெற்ற இப் புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழக 8வது நிறுவுகை நிகழ்விலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக லயன்ஸ் கழக மாவட்ட ஆளுனர் ( 306 C2 ) லயன் ரஞ்சித் பெனான்டோ PMJF/MAF/FDI அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
லயன்ஸ் ரணசிங்க லலித்குமார் MJF/MAF/MBA/JP அவர்கள் கடந்தகாலங்களில் இக்கழகத்தின் பொருளாளர்,செயலாளர் ஆகிய பதவிகளை வகித்ததோடு தற்போது Region 12 இற்கான cabinet இல் LCIF coordinator ஆகவும் பதவி வகிக்கின்றார்.
அதேசமயம் இந் நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற லயன்ஸ் கழக அங்கத்தவர்களின் பிள்ளைகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன்,குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு இடங்களிலுமிருந்து லயன்ஸ் கழக உறுப்பினர்களும், லியோ கழக உறுப்பினர்களும், இலங்கை இராணுவ அதிகாரிகளும் , விமானப்படை அதிகாரிகளும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.