Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இன்று தாவிய நிலையில் அவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், அந்த சபை முஸ்லிம் காங்கிரஸின் வசமானது.

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்யும் அமர்வு இன்று திங்கட்கிழமை (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் அமர்வின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நிலையில் அவரும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.எம்.எஸ்.எம். கலாட்டீன் ஆகியோர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இதன்போது திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் 9 வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரதி தவிசாளருக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எல்.எல்.எம். யலால்தீன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் பிரதி தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ் 9 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 08 உறுப்பினர்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 06 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி – 01 உறுப்பினரையும், சுயேட்சைக்குழு 01 உறுப்பினரையும் பெற்றுக் கொண்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், எம்எல்எம் ஹிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நா.உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.