புளொட்டுக்குள்ளும் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 18 வாக்குகளால் ஓர் ஆசனம் கிடைக்காமல் போனது என்று ஒரு கதை உலாவுகின்றது. அது புளொட் சொந்தச் செலவில் வைத்துக்கொண்ட சூனியம் என்பதுதான் இப்போது புதுத்தகவல்.
அந்தப் 18 வாக்குகளையும் இல்லாமலாக்கியதிலும் தேசிய மக்கள் கட்சியையும் யாழ்ப்பாணத்தில் வெல்ல வைத்ததிலும் புளொட்டுக்கும் பங்கிருக்கின்றது என்கிற விடயம்தான் கட்சிக்குள் இப்போது பூதாகாரமாகக்கிளம்பத் தொடங்கியுள்ளது.
பொதுத் தேர்தலில் புளொட்டின் வெளிநாட்டு உறுப்பினர்கள் பலர் தேசிய மக்கள் சக்திக்காகப் பணியாற்றினார்கள் என்பதுதான் புதிய தகவல். இதற்காகவே புளொட் உறுப்பினர்கள் பலர் வெளிநாட்டில் இருந்துஇலங்கைக்கு வந்திருந்தார்களாம்.
தேர்தல்களின்போது இப்படிவருவது புளொட் பெயர் உறுப்பினர்களின் வழக்கம்தான். ஆனால், பலரது அவர்கள் சித்தார்த்தனின் வெற்றிக்காக இங்கு வேலை செய்வார்கள். அவர்களில் பலர் வெளிநாட்டுகளில் குடியுரிமை பெற்றவர்கள் என்பதாலும் அவர்கள் பகிரங்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபடமுடியாத என்பதாலும் சித்தார்த்தனின் தேர்தல் பின்புலப் பணிகளில்தான் அவர்களின் பங்களிப்பு இருக்கும். இதனால் அவர்களின் பங்களிப்புபெரியளவில் மக்களுக்குத் தெரியும் வகையில் இருப்பதில்லை. ஆனால் புளொட் அமைப்போடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு இதுநன்குதெரியும்.
பரப்புரைத் திட்டங்களிலும் நிதி திரட்டலிலும் அவர்களின் கணிசமான பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். 2015, 2020 பொதுத்தேர்தல்களில் இப்படி புளொட்டின்பல வெளிநாட்டு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் வந்து நின்று சித்தார்த்தனின் வெற்றிக்காக உழைத்துள்ளார்கள்.
இந்தத் தடவை அவர்களில் பலர் சித்தார்த்தனுக்காக அன்றி தேசிய மக்கள் சக்திக்காகவே பணியாற்றினார்கள் என்பது இப்போது புளொட்டுக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
சித்தார்த்தன் தேர்தலில் தோற்று, தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் பிரச்சினை மெல்ல வெடிக்கத் தொடங்கியுள்ளது.
புளொட்டுக்கும் ஜே.வி.பிக்கும் பூர்வஜென்மத் தொடர்புகள் உண்டு. ஜேவிபிக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது தொடங்கி அந்தப் பந்தம் நீண்டது. இப்போதும் இரு தரப்பினருக்கும் இடையில் இந்தத் தொடர்புகள் நீடிக்கின்றன. அதனால் வெளிநாடுகளில் புளொட்டுக்கு வழக்கமாகத் தேர்தல் நிதி வழங்குபவர்களில் அரைவாசிப்பேர் இந்தமுறை தேசிய மக்கள் சக்திக்குத்தான் நிதிவழங்கினார்கள் என்றும் தகவல்.
இது தவிர வந்து நின்று வேலை செய்தவர்களில் நேர்வேராஜன் என்பவரின் பெயர் பரவலாக அடிபடுகின்றது. இன்னும் பெயர்களும் வெளிவரும் என்கிறார்கள். புள்ளாட்டுக்குள் இந்தப்பிரச்சினைவெடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தேசிய மக்கள் சக்தியை வடக்கில் வெல்ல வைத்தவர்கள் யார் என்கிற குற்றச்சாட்டுக்குள்ளும் புளொட் சிக்கிக்கொள்ளப் போகின்றது.
தோல்விக்காக அழுவதா அல்லது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மகிழ்வதா என்று தெரியாத திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கியுள்ளார் சித்தர்.