Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல் புனித மரியாள் தேவாலயத்தில் உள்ள அருட்தந்தையின் சமாதியில்நேற்று (06) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள்,ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ உட்பட அருட்தந்தையர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சமாதியிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றன.

1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு எதிராக இவர் துணிந்து களத்தில் நின்று குரல்கொடுத்து வந்தார்.

அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டதுடன், ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளுக்கு எதிராகவும் செயற்பட்டுவந்தார்.

வடகிழக்கில் நீதிக்காகவும் உண்மைக்காகவும் 11அருட்பணியாளர்கள் தமிழர் தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு