Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நரக விலை கொடுக்க நேரிடும்” ; ஹமாஸுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்

“நரக விலை கொடுக்க நேரிடும்” ; ஹமாஸுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடக்கம். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. அதேவேளை, தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாஸுக்கு டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ம் திகதி பதவியேற்க உள்ளார்.

ஜனாதிபதியாக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்பு பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவேண்டும், அவ்வாறு பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் திகதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
Next Post
மாகாண சபை முறைமை தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்; சபையில் சாணக்கியன்

மாகாண சபை முறைமை தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்; சபையில் சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு