Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

5 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, காசல்ரீ மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்கள் அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 5 அடி மாத்திரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, பிராட்லண்ட்ஸ் மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் அதிகரித்த நீர்வரத்தைப் பயன்படுத்தி, நாட்டின் அன்றாட மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை மின்சார சபை நீர்மின் உற்பத்தியை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலாகங்குல ஓயா, மரே ஓயா உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

கெசல்கமுவ ஓயா மற்றும் டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கை உள்ளிட்ட அதன் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

மறுபுறம், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, நோர்வூட், ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா மற்றும் அம்பகமுவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், கனமழை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையையும் கொண்டுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, கித்துல்கல, கினிகத்தேனை, தியகல, நோட்டன், ஹட்டன், டயகம, பொகவந்தலாவ, நோர்வூட், புளியாவத்தை, மஸ்கெலியா, சாமிமலை, நாவலப்பிட்டி, நானுஓயா, தலவாக்கலை, வட்டகொடை, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், சிவனொளிபாதமலைக்குச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மலை உச்சியிலிருந்து படிக்கட்டுகள் வழியாக மழைநீர் அதிகளவில் வழிந்தோடுவதால் அவை மிகவும் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. எனவே, சிவனொளிபாதமலை ஏறும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் படிக்கட்டுகளில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்
செய்திகள்

ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்

November 8, 2026
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

November 8, 2026
அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

November 8, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.