நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பெய்த கன மழையையடுத்து 8 மாவட்டங்களிலுள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, காலி மாவட்டத்தின் தவலம மற்றும் நாகொட, கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மினிப்பே, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, ருவன்வெல்ல, மாவநெல்லை, அரநாயக்க, வரக்காப்பொல, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு, மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன, வெலிகேபொல, கொடகவெல மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின் அவதானத்துடன் இருக்குமாறும், இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.







