வடக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (5) காலை கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று (05) காலை அவரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலமொன்றை பெற்றதன் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.