திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பைசல் நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா , பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.