ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.
வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வர்த்தகர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகும். சில்லறை விலை 230 ரூபா.
ஒரு கிலோ வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபா.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.
ஒரு கிலோ சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகும். சில்லறை விலை 240 ரூபா.
ஒரு கிலோ கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபா சில்லறை விலை 260 ரூபா