Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

1 year ago
in செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக அண்மையில் கேபிவசெர்டிப் என்ற மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் தேசிய சுகாதார சேவையில் (NHS) அறிமுகம் செய்யப்பட்ட இந்த மருந்தை கார்டிஃப் பல்கலைக்கழகம் மற்றும் வெலின்ந்ரே புற்றுநோய் மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த மருந்தை தற்போது வேல்ஸில் உள்ள என்.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிக்கு முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொள்ளும் பெண்கள் இந்த கேபிவசெர்டிப் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ‘வாழ்நாள்’ இரட்டிப்பாகும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிகாட்டியுள்ளன.

கேபிவசெர்டிப் மாத்திரையின் செயல் திறனை ஆய்வுக்குட்படுத்தும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் ராப் ஜோன்ஸ், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறிது காலம் கூடுதலாக வாழும் வகையில் இந்த மாத்திரை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஹார்மோன் தெரபியோடு சேர்த்து ப்ளேஸ்போ எடுத்துக் கொண்ட போது அவர்களின் உயிர் வாழும் சூழல் 20 மாதங்கள் ஆக இருந்தது. ஆனால் கேபிவசெர்டிப் மருந்தை ஹார்மோன் தெரபியோடு வழங்கும் போது அவர்களின் வாழ்நாள் 39 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது என்று பேராசிரியர் ராப் ஜோன்ஸ் கூறினார்.

வெலின்ந்ரே புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் சிமோன் வாட்டர்ஸ் கூறுகையில்,

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உலக அளவில் பயன்படுத்த 2023-ஆம் ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், கேபிவசெர்டிப் மருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வெலின்ந்ரே புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் மருத்துவர் சிமோன் வாட்டர்ஸ், “சிறந்த வாய்ப்பினால் நாம் தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளோம்,” என்று கூறினார்.

நீண்ட காலமாக இதனை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தற்போது நிலையான சிகிச்சையின் ஒரு அங்கமாக இந்த மருந்தை பயன்படுத்தலாம், என்று அவர் தெரிவித்தார்.

இந்த சிகிச்சையை சில காலமாக, நோயாளிகளை உள்ளடக்கிய சிறு குழுக்களில் பயன்படுத்தி வருகின்றோம். இந்த மருந்து மிகவும் வீரியமானது என்று எடுத்துக் கொண்டாலும் கூட சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட க்வென் பச்சன், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கேபிவசெர்டிப் என்ற இந்த மருந்து அவருடைய மகன் திருமணம் செய்து கொள்வதை பார்க்கும் வாய்ப்பை அளிக்கும் என்றும், அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
நல்லூரில் பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு

நல்லூரில் பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.