முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்வரும் 27ஆம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பெறப்படவுள்ளது.அமைப்பு ஒன்று மேற் கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் இலஞ்சம் தொடர்பான குற்றங்களுக்குள் அடங்ககூடியதா
என்பது குறித்து விளக்கமளிப்ப தற்காக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முற்படுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை, இந்த விசாரணைகள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அளித்த இரண்டாவது வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்குவதற்காக பொதுஜன பெரமுனவின் ஆதர வாளரான வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணம் அது என குறிப்பிட்டிருந்தார்.எனினும் ஜனாதிபதி மாளி கைக்குள் அறகலய ஆர்ப்பாட்டகாரர்கள் நுழைந்ததை தொடர்ந்து ஆவணங்கள் காணாமல்போனமையால் யார் அந்த பணத்தை வழங்கியது என்பதை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.