Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

7 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் பிணங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடி தங்களது சப்பாத்துகளிலும், உடைகளிலும் மறைத்து வைத்ததாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் (16) யாழ். சாங்கானை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடை கற்களை படிக்கற்களாக பாவித்து நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இராணுவம் எங்களை நோக்கி சுட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எங்களது உறவுகளின் உடலங்களை நாங்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம்.

இதன்போது இராணுவத்தினர், இறந்து கிடந்த பிணங்களில் காணப்பட்ட நகைகளை கழற்றி தங்களது சப்பாத்துகளிலும், உடைகளிலும் மறைத்து வைத்ததை அவதானித்தோம்.

நாங்கள் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை, எங்களது உடைமைகளையும் இழந்தோம்.

இறுதி நேரத்தில் உணவுக்கே பாரிய நெருக்கடியை எதிர்நோக்கினோம். இறுதியில் இருந்த வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் விற்று கஞ்சி காய்ச்சி குடித்து உயிரை தக்கவைத்தோம். இருப்பினும் 12,13ஆம் திகதிகளில் அந்த கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது.

அரிசி இல்லை, சமைப்பது என்றால் பாத்திரங்கள் இல்லை, உடைகள் இல்லை, பெண்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இல்லை.

தொடர்ந்து யுத்தம் நடக்கும்போது ஓடிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

May 16, 2025
திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்
செய்திகள்

திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்

May 16, 2025
Next Post
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு