தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொலிஸ் நிலையங்களுக்கு சென்றும் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக வடமாகாண பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் பொலிஸ் நிலையத்திற்கு வரும்போது அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் எழுந்து நின்று தம்மை சேர் என அழைக்க வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகின்றது.
வடமாகாண பொலிஸ் அதிகாரிகள் இந்த நபரின் நடத்தை தொடர்பான முழு காணொளி காட்சிகளுடன் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் பணிபுரியும் நிகழ்ச்சி நிரல் பற்றிய அடிப்படை புரிதலுடன் அவரது பகுத்தறிவற்ற மற்றும் வெறித்தனமான நடத்தையைப் பொறுத்து பொறுமையாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிக்கு பொருந்தாத வகையில் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றாரா என அவதானித்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மேலும் , அருச்சுனா எம்.பி தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர் சத்தியமூர்த்தியும் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளமை குற்இப்பிடத்தக்கது.