புதிய இணைப்பு
மட்டு ஆற்றுவாயில் படகு கவிழ்ந்து காணாமல் போன மீனவர் சற்றுமுன்னர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சடலம் ஆற்றுவாய்க்கு அருகில் உள்ள தரை பகுதியில் கரையொதுங்கி காணப்பட்டுள்ளதுடன், மீனவரை தேட சென்ற சக பகுதி மீனவர்கள் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொக்குவில் பொலிஸாருக்கும், அந்த பகுதி கிராம சேவகருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மரணமடைந்த மீனவர் ஒரு குடும்பஸ்தர் என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் இணைப்பு

மட்டு முகத்துவாரம் ஆற்றுவாய் கடலுக்குள் படகு கவிழ்ந்து விபத்து; ஒரு மீனவர் மாயம்
மட்டு முகத்துவாரம் ஆற்றுவாய் கடலுக்குள் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேர் கொண்ட ஒரு படகில் கடலுக்குச்சென்று மீன் பிடித்திவிட்டு, இன்று காலை மீன் வியாபாரம் செய்யும் சந்தைக்கு சென்றுகொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கவிழ்ந்த படகு மற்றும் அதில் பயணித்த மற்றைய மீனவர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், சுவிஸ்கிராமத்தை சேர்ந்த வேணு என்னும் இளைஞன் காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞனின் வீட்டாருக்கு மீனவர்கள் தகவல் சொல்லியுள்ளதுடன், காணாமல்போயுள்ளவரை தேடும் பணிகள் மீன்வர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.