சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சபாநாயகரின் கூற்றினை கருத்திற் கொண்டு செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.