பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது.
புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் இன்று (17ம் திகதி) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தலைமையில் கூடி தற்போதை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நியமங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மனோ கணேசன், மொகமட் பைசல் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க, முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது ஆகியோருக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தேசிய பட்டியல் மூலம் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய சபாநாயகரக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.