யாழ் நீதிமன்ற நீதிபதியின் இந்த “கடும் எச்சரிக்கையுடனான” தீர்ப்பு ஆசியாவின் அதிசயங்களில் ஒன்று.
மக்களுக்கான அரச வைத்தியசாலையில் அதன் பணிப்பாளராக செயற்படும் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி என்பவர் தன் கடமை நேரத்தில் தன் அலுவலக கதவை திறந்து வைத்து மக்களோ அல்லது மக்களின் பிரதிநிதிகளோ தம் தேவைகளின் நிமித்தம் அவரை அணுக்கக்கூடிய விதத்தில் செயற்பட வேண்டியவர்.
தலையாட்டி பொம்மைகளுக்கும், தன் சக மருத்துவ மாபியாக்களுக்கும் தினமும் கடமை நேரத்தில் முன் அனுமதியின்றி அவரை அணுக்கக்கூடிய விதத்தில் இருக்கும் குறித்த திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி தனக்கு பிடிக்காதோர் மற்றும் தன் ஊழலை தட்டிக்கேட்கும் திறன் கொண்டோரை மறுதலிப்பது ஒன்று அவரின் காழ்ப்புணர்வையும், இரண்டு அவரின் பயத்தையும் பிரதிபலிக்கின்றது.
மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி விடையத்தில் துரித கதியில் நீதி செய்த கனம் கோட்டார் அவர்கள் ஏன் தனியார் ஆதனத்தில் கட்டப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரை விடையத்தில் பெட்டிப்பாம்பாய் சுருண்டு கிடக்கின்றார்? இந்த விடையத்தில் அவரால் நீதியின் நிமித்தம் செயற்பட முடியவில்லையே? அதன் காரணம் என்ன?
ஊழல்வாதிகளை களையெடுக்க தொடங்கும் முன் அவர்களுக்கு உடந்தையாக சட்ட பாதுகாப்பை வழங்கி பக்கச்சார்பாக செயற்படும் இவர் போன்ற நீதியாளர்களை உடன் இடமாற்றம் செய்யவேண்டும் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களே.
நீதிமன்ற அவமதிப்பு அது இது என்ற போர்வைகளுக்குள் ஒழிக்காது மக்களுக்கு நம்பிக்கையான துரித கதியில் வழக்குகளை முடிக்கக்கூடிய வினைத்திறன் கொண்ட “நீதிபதிகள்” கடமைகளில் அமர்த்தப்பட வேண்டும்.
வழக்குகளை வருடக்கணக்கில் இழுத்தடித்து, மக்களையும் அலைத்து, அவர்களின் பணங்களையும் நேரங்களையும் வீண் விரையம் செய்து, சட்டதரணிகளை பணம் பார்க்கவைக்கும் நீதிமன்ற நடைமுறை இலங்கையில் மிக நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இது சர்வதேச தரத்துக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.