கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் சென்ற பெண் ஒருவரின் தலை முடிகள் உதிர்ந்து விழுந்து காயங்கள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க வெலிக்கடை பொலிஸாருக்கு நேற்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெலிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகுக்கலை நிலையம் ஒன்றில் சிகை அலங்காரம் செய்துகொண்டுள்ளார்.
சிகை அலங்காரம் செய்துகொண்ட பின்னர் இந்த பெண்ணின் தலை முடிகள் உதிர்ந்து விழுந்துள்ள நிலையில் தலையில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. பின்னர் இந்த பெண் இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த அழகுக்கலை நிலையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்றைய தினம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.