சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக நான் பரீட்சை எழுதினேன் என்று யாராவது நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரவமாட்டேன். ஆனால் அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்துக்கு வரக்கூடாது. அவரால் முடியுமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்று கூறி அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று சபையில் தெரிவித்திருந்தார். அதற்கு இன்று பதிலளித்த நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சட்டக்கல்லூரி பரீட்சைக்கு நான் தனியாக தோற்றினேன். அல்லது எனக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன என்று யாராவது நிரூபித்தால் நான் பாராளுமன்றுக்கே வர மாட்டேன். ஆனால் அதனை நிரூபிக்கத் தவறினால் இதனை சாடிய அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றம் வரக்கூடாது. இந்த சவாலை ஏற்கத் தயாரா? அரசாங்கம் தான் முன்னர் கூறியவற்றை செய்யமுடியாமல் இப்போது வேறு விடயங்களை செய்ய முயல்கிறது. சொன்னது ஒன்று செய்வது இன்னொன்று. என்று குறிப்பிட்டார்.