Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய காத்தான்குடி முஹைதீன் (அல்-அக்ஸா) ஜுப்ஆப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (06) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போதே தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பொதுமக்கள் மத்தியில் மேலும் தெரிவித்ததாவது, அறிவுரைகளை மதிக்காது செயற்பட்டமையினால் 21 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் ஏற்கவே அல்-அக்ஸா பள்ளவாயலுக்கு முன்னால் தலைக்கவசமின்றி பயணித்ததற்காக எச்சரிக்கப்பட்டிருந்தார்.

சிலர் பொலிஸாருக்கு பயந்து தலைக்கவசம் அணிந்தாலும் அதற்கான கிளிப்பினை பொருத்துவதில்லை. அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றின் தலைக்கவசம் அணிந்த போதிலும் அதற்கான கிளிப்பினை பொருத்தாததனால் குறித்த நபர் விழுகின்றபோது தலைக்கவசமும் கழன்று விட்டதால் தலையில் அடிபட்டு அந்த நபர் உயிரிழந்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டோரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர். இதுவும் ஆபத்தானதாகும்.

நாளைய தினம் பெருநாளைக் கொண்டவுள்ள நீங்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் உங்கள் உறவுகளுக்கு அதன் ஆபத்தை உணர்த்துங்கள்.

இந்தத் தகவலை அவர்களுக்குச் சொல்லுங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இதனைப் பரப்புங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு அபராதத் தொகைக்கான சிட்டை வழங்கப்படமாட்டாது. ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தைச் செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டு அவர்கள் நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

நாங்கள சீருடை அணிந்திருப்பது உங்களது உயிர்களைப் பாதுகாப்பதற்காகவேயாகும். எனவே எமது அறிவுரைளை மதித்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வீதிப் பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்குவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்த பள்ளிவாயலின் இமாம்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபையினருக்கும் எனது நன்றிகள் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு